விதிகளை மீறிய ஆறு கனரக வாகனம் பறிமுதல். 24 ஆயிரம் ரூபாய் அவதாரம். போக்குவரத்துக் காவல் துறை அதிரடி.


தூத்துக்குடி மாநகர் பகுதியில் காலை 8 மணி முதல் கனரக வாகனங்கள் மாநகருக்குள் வர அனுமதி இல்லை குறிப்பாக பள்ளி செயல்படுகின்ற நேரத்தில் கனரக வாகனங்கள் ஒருபோதும் மாநகர் பகுதிக்கு அனுமதியே கிடையாது இந்த நிலையில் மாநகர் பகுதியில் தொடர்ந்து கனரக வாகனங்கள் வருகிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள் அதன் அடிப்படையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுணை முருகன் போக்குவரத்து உதவி ஆய்வாளர் சண்முகபாலன் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் காலை 8 மணி முதல் 9 மணி வரை மாநகர் பகுதியில் அனுமதி என்று மாநகருக்குள் வந்த ஒரு டிராக்டர் 5 கனரக லாரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுணை முருகன் உதவி ஆய்வாளர் சண்முகபாலன் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் அதிரடியாக ஆறு கனரக வாகனங்களை பறிமுதல் செய்து போக்குவரத்து காவல்துறையினர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது

அங்கு போக்குவரத்து விதிகளை நேரில் அனுமதி இல்லாத நேரத்தில் மாநகர் பகுதிக்கு கனரக வாகனங்கள் வந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒரு வாகனத்திற்கு 4 ஆயிரம் ரூபாய் அபதாரம் விதிக்கப்பட்டது ஆறு வாகனத்திற்கு 24 ஆயிரம் ரூபாய் அபதாரம் விதிக்கப்பட்டது. போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுணை முருகன் கூறுகையில் மாநகர் பகுதியில் அனுமதி இல்லாத நேரத்தில் கனரா வாகனங்கள் உள்ளிட்ட எந்த ஒரு வாகனங்களும் மாநகர் பகுதி போல் வரக்கூடாது

அதை மீறி கனரக வாகனங்கள் வந்தால் பறிமுதல் செய்யப்பட்டு அபதார தொகை வசூலிக்கப்படும் தொடர்ந்து இதுபோல செயலில் ஈடுபட்டால் அந்த வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுணை முருகன் தெரிவித்துள்ளார். ஒரே நேரத்தில் போக்குவரத்து காவல்துறையினர் விதிகளை மீறி அனுமதி இல்லாத நேரத்தில் மாநகர் பகுதியில் வந்ததாக ஆறு கனரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *