கோவை வருவாய் மாவட்டம் மற்றும் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான டென்னிஸ் மற்றும் இறகுப்பந்து போட்டி

இரண்டு நாட்கள் நடைபெறும் இதில் 500 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு கோவை வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட 18 குறுமையங்களுக்கான குறுமைய விளையாட்டு போட்டிகள் கோவை மாவட்ட வருவாய் மாவட்டம் மற்றும் கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி இணைந்து கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன…

இந்நிலையில் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படும் இறகுப்பந்து மற்றும் டென்னிஸ் போட்டி பாரதியார் பல்கலைகழக வளாகத்தில் துவங்கியது..

மாணவர்கள்,மாணவிகளுக்கென இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இதில் கோவை,பொள்ளாச்சி,மேட்டுப்பாளையம், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 550 பள்ளிகளில் இருந்து போட்டியாளர்கள் பங்கு பெற்றுள்ளனர்..

இந்நிலையில் இதற்கான துவக்க விழாவில்,இறகுப்பந்து மற்றும் டென்னிஸ் போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன், கோவை வருவாய் மாவட்ட விளையாட்டு போட்டி குழு பொது செயலாளர் மற்றும் ஆஸ்ரம் பள்ளி நிர்வாகி உதயேந்திரன், டென்னிஸ் ஹைபர் மார்க்கெட் நிர்வாக இயக்குனர் டென்னிஸ், வி.எல்.பி.ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் குமார் ,பாரதியார் பல்கலைகழக உடற்கல்வி துறை தலைவர் ராஜ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்..

இறகுப்பந்து போட்டியை கனிப்பாண்டியன் , காளீஸ்வர் ,மற்றும் டென்னிஸ் போட்டியை தனசேகர் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்..

போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கோவை வருவாய் மாவட்ட விளையாட்டு போட்டி குழு,துணை செயலாளர்கள் சைமன் துரை,கெம்புராஜ்,தண்டபாணி,ஐஸ்வர்யா,சுகன்யா,ஆகியோர் செய்தனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *