கரூர்: கரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பெண் காவலர்கள் மற்றும் சிங்கப்பெண் அதிரடிப்படை காவலர்களுக்கு தற்காப்புக் கலையான கராத்தே பயிற்சி நடைபெற்றது.

பெண் காவலர்கள் தங்களது பணியின்போது எதிர்கொள்ளக்கூடிய சவால்களை திறம்பட சமாளிக்கும் வகையில், அவர்களின் தன்னம்பிக்கை மற்றும் தற்காப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில் இப்பயிற்சி வழங்கப்பட்டது. கராத்தே பயிற்சியில் தற்காப்பு நுட்பங்கள், எதிரிகளை சமாளிக்கும் முறைகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் நந்தகோபால், ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் வெங்கடாசலம், ஆயுதப்படை ஆய்வாளர் பொன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், கரூர் மாவட்ட விளையாட்டு ஆணையத்தின் கராத்தே மாஸ்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கராத்தே பயிற்சி பெற்ற மாணவிகள் பலர் கலந்து கொண்டு பெண் காவலர்களுக்கு பல்வேறு தற்காப்புக் கலை பயிற்சிகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் பெண் காவலர்கள், ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *