சயனபுரம் அரசு பள்ளியில் NSS நிறைவு விழா

ஒன்றிய செயலாளர் பங்கேற்பு – மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கல்

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், சயனபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய நாட்டு நலப்பணித் திட்டத்தின் (NSS) நிறைவு விழா மற்றும் நினைவுப் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக சயனபுரம் எஸ்.ஜி.சி. பெருமாள், மாவட்ட தலைவர், லயன்ஸ் சங்கம், கலந்து கொண்டு மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு உதவி திட்ட அலுவலர் சிவஜோதி வரவேற்புரை ஆற்றினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் விஸ்வநாதன் வாழ்த்துரை வழங்கினார். திட்ட அலுவலர் சரஸ்வதி வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில் பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *