கோவை வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட 18 குறுமையங்களுக்கான குறுமைய விளையாட்டு போட்டிகள் கோவை மாவட்ட வருவாய் மாவட்டம் மற்றும் கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி இணைந்து கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன…

இந்நிலையில் இதன் இறுதி கட்ட தேர்வு போட்டிகள் கோவை இராமகிருஷ்ணா தொழில் நுட்ப கல்லூரியில் நடைபெற்றது..

மாணவர்கள்,மாணவிகளுக்கென நான்கு நாட்கள் நடைபெறும் ,இதற்கான துவக்க விழாவில், ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி தாளாளார் லயன் டாக்டர் தேவேந்திரன்,ராமகிருஷ்ணா தொழில் நுட்ப கல்லூரியின் சி.இ.ஓ.ராம்குமார்,மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன்,கோவை வருவாய் மாவட்ட விளையாட்டு போட்டி குழு பொது செயலாளர் மற்றும் ஆஸ்ரம் பள்ளி நிர்வாகி உதயேந்திரன்,ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர்..

கோவை,பொள்ளாச்சி,மேட்டுப்பாளையம், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 550 பள்ளிகளில் இருந்து போட்டியாளர்கள் பங்கு பெற்றுள்ள இதில்,கோ கோ,கபடி,த்ரோ பால்,டேபிள் டென்னிஸ்,கூடைப்பந்து,கைப்பந்து,கால்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன..

போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கோவை வருவாய் மாவட்ட விளையாட்டு போட்டி குழு,துணை செயலாளர்கள் சைமன் துரை,கெம்புராஜ்,தண்டபாணி,ஐஸ்வர்யா,சுகன்யா,மற்றும் ராமகிருஷ்ணா தொழில் நுட்ப கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் வேலுசாமி
ஆகியோர் இணைந்து செய்தனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *