கரூர் செய்தியாளர் மரியான் பாபு
..
கரூர் மாவட்டம் வெண்ணைமலையில் அமைந்துள்ள சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் வெண்ணைமலை ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் ஏழு நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இம்முகாமை பள்ளியின் தாளாளர் K.பாண்டியன் மற்றும் முதல்வர் V.பழனியப்பன் முன்னிலையில் திருக்கோயில் செயல் அலுவலர் சுகன்யா தொடங்கி வைத்தார்.
முகாமின் போது நாட்டு நல பணி மாணவத் தொண்டர்கள் கோயில் மற்றும் சுற்றுப்புறத் தூய்மைப்பணி, விழிப்புணர்வுப் பேரணி,ஆலய உழவாரப்பணி உள்ளிட்ட பல்வேறு சமூகநலப் பணிகளில் ஈடுபட்டனர்.
நிறைவு விழாவில் பள்ளியின் முதல்வர் கலந்து கொண்டு சிறப்பாகப் பணியாற்றிய நாட்டு நலப்பணித்திட்ட மாணவத் தொண்டர்களைப் பாராட்டி அவர்களுக்கு வாழ்த்துகளையும், ஊக்கத்தையும் வழங்கினார்.சமூகப் பொறுப்பு மற்றும் சேவை மனப்பான்மையை மாணவர்களிடையே வளர்க்கும் வகையில் இச்சிறப்பு முகாம் சிறப்பாக நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் தூய்மை விழிப்புணர்வு செய்த பள்ளி மாணவர்களை அனைவரும் பாராட்டினர்.