சேலம் மாவட்டம், மேச்சேரி காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறையில் “தமிழரும் கீழடியும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கவிதா வரவேற்புரை வழங்கினார்.
தி காவிரி கல்வி நிறுவனங்களின் செயலாளர் பேராசிரியர் இளங்கோவன் தலைமையுரை ஆற்றினார்.காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் செல்வக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.
தமிழ்த்துறையின் உதவிப் பேராசிரியர்கள் திருமதி. கா. கவிதா, முனைவர் அனிதா, திருமதி மேனகா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினர்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட புதுதில்லி, இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் இயக்குநர், திருமிகு. அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்கள் உண்மையான வரலாறு என்று எடுத்துக்கொள்ளப்படுவது தொல்லியல் ஆய்வு மட்டுமே. தொல்லியல் பொருட்களில் புனைவுகள் இருக்காது. தமிழுக்கும், தமிழின் தொன்மைக்கும் தமிழரின் தொன்மைக்கும் செய்ய வேண்டிய கடமை நம்முடையது என்றுதான் நாங்கள் இந்த அகழாய்வினைச் செய்தோம். அனைவரையும் கட்டிப்போடும் சொல் கீழடி. தொல்லியல் பற்றிய அறிவினைப் பெற வைத்ததும் கீழடியே என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்று நம் தமிழின் தொன்மையைப் பறைசாற்றும் தமிழ்மகனாகச் சிறப்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட சென்னை மாநிலக் கல்லூரி, வரலாற்றுத்துறையின் இணைப் பேராசிரியர் முனைவர் மாரப்பன் அவர்கள் இந்தியாவின் வரலாற்றைக் குறிப்பாக தமிழகத்தின் வரலாற்றைத் தமிழருக்கான அடையாளத்தை நமக்குக் கொடுத்தது கீழடி என்று கருத்துரை வழங்கினார். மற்றும் மேட்டூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர். முனைவர் அரங்க சீனிவாசன் அவர்கள் வைகை ஆற்றங்கரையின் அகழாய்வினால் இந்தியாவின் மனித சமூகம்தான் முன்னோடியான சமூகம் என்று கீழடி ஆய்வறிக்கையின் சிறப்புகளைக் கூறி கருத்துரை வழங்கினார்.
மாணவர்கள் தாங்கள் வாழும் பகுதியான தெலுங்கனூர் அகழாய்வினைப் பற்றிய செய்திகளைச் சிறப்பு விருந்தினர் அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்களிடம் கேட்டுத் தெளிவுற அறிந்து கொள்ளும் வாய்ப்பாக இந்நிகழ்வு அமைந்தது என்று உள்ளம் நெகிழ்ந்து பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தி காவிரி கல்வி நிறுவனங்களின் கௌரவத்தலைவர் முனைவர் நடேசன், தலைவர் அன்பழகன், துணைத்தலைவர் மதன்கார்த்திக், தாளாளர் இராமநாதன், ஒருங்கிணைப்பாளர் ரேவதி இளங்கோவன், இணைச் செயலாளர் ஹரிசங்கர், மாணவர் சேர்க்கையின் புல முதன்மையர் பேராசிரியர் நந்தகுமார், அனைத்துத் துறைத் தலைவர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் அனைவரும் கலந்துகொண்ட மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இந்நிகழ்வின் நிறைவாக தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் தூய தமிழ்ப் பற்றாளர் நாகராஜ் நன்றியுரை வழங்கினார்.