செய்தியாளர் ராஜாராம் குமார்

பெரம்பை: விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பெரம்பை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 8ஆம் ஆண்டு நவராத்திரி விழாவின் முதல் நாள் பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி, ஆலயத்தில் பல்வேறு சுவாமி சிலைகள் கொலுவில் வைக்கப்பட்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. முதல் நாளில் வெளியூர்களிலிருந்து வந்த பக்தர்கள் கலந்துகொண்டு நவராத்திரி கொலு பூஜையைச் சிறப்பாக நடத்தினர். தொடர்ந்து அம்மனுக்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

மேலும், நவராத்திரி விழாவை முன்னிட்டு தினந்தோறும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்கும் வகையில் சிறப்புப் பூஜைகள் நடைபெற உள்ளதாக ஆலயப் பூசாரி தெரிவித்தார்.

விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *