செய்தியாளர் ராஜாராம் குமார்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பெரம்பை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஏழை மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதில் அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தொடர்ந்து வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு பிரசாதம் வைத்து படையலிட்டு, தீபாராதனை நடத்தப்பட்டது.

இந்த சிறப்பு வழிபாட்டில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். விழாவின் நிறைவாக பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *