தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஒன்றியம், தே.சிந்தலச்சேரியில் உள்ள மதர் தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சிறப்பு பல்நோக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பங்கேற்று இரத்ததானம் செய்தவர்களுக்கு நற்சான்றிதழை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா வழங்கினார் இந்த

மருத்துவ முகாமிற்கு மதர் தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தலைவர் பீட்டர், கல்லூரித் தாளாளர் பாஸ்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

டாக்டர் ஜீவா சிங்கராஜ் தலைமையில் 7 டாக்டர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் பங்கேற்று, பொதுமருத்துவம், சித்த மருத்துவம், ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை பரிசோதனை, இ.சி.ஜி. உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்டும் அதற்கு
தகுந்த மருத்துவ ஆலோசனைகளும் இலவசமாக மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டன

மேலும் இந்த முகாமில் தானத்தில் சிறந்த தானம் இரத்ததானம் என்பதை வலியுறுத்தும் விதமாக ஏராளமானோர் இரத்த தானம் செய்தனர். இரத்த தானத்தை ஊக்குவிக்கும் விதமாக கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்
ஏ. ஜெகநாத் மிஸ்ரா இரத்த தானம் வழங்கியவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி ஊக்குவித்தார்

இந்த மருத்துவ முகாமில் உத்தமபாளையம் ஒன்றியத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவப் பரிசோதனைகள் செய்து பயன் பெற்றனர்

முகாமில் தமிழக வெற்றிக் கழக தேனி தென்மேற்கு மாவட்டத் துணைச் செயலாளர் கூடல் செல்வேந்திரன், செயற்குழு உறுப்பினர் அய்யர், மாவட்டப் பொருளாளர் கவுதம், உத்தமபாளையம் மத்திய ஒன்றியச் செயலாளர் ரகுவரன், கம்பம் நகரப் பொறுப்பாளர் சுப்பிரமணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை கம்பம் சட்டமன்ற உறுப்பினரின் தனிச் செயலாளர் ரகுபதி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *