கோவை வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட 18 குறுமையங்களுக்கான குறுமைய விளையாட்டு போட்டிகள் கோவை மாவட்ட வருவாய் மாவட்டம் மற்றும் கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி சார்பாக கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன…

பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வரும் இதற்கான தடகள போட்டிகளுக்கான இறுதி கட்ட தேர்வு போட்டிகள் கோவை நேரு ஸ்டேடிய அரங்கில் நடைபெற்றது..

மாணவர்கள்,மாணவிகளுக்கென இரண்டு நாட்கள் நடைபெறும் ,இதற்கான துவக்க விழாவில், ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி தாளாளார் லயன் டாக்டர் தேவேந்திரன்,கே.ஜி.மருத்துவமனை தலைவர் மருத்துவர் பக்தவத்சலம்,மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன்,கோவை வருவாய் மாவட்ட விளையாட்டு போட்டி குழு பொது செயலாளர் மற்றும் ஆஸ்ரம் பள்ளி நிர்வாகி உதயேந்திரன்,மற்றும் நிர்வாகிகள் கவுரி,சவுந்தர்யா ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர்..

கோவை,பொள்ளாச்சி,மேட்டுப்பாளையம், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 550 பள்ளிகளில் இருந்து போட்டியாளர்கள் பங்கு பெற்றுள்ள இதில்,,ஓட்டப்பந்தயம்,தொடர்,மற்றும் தடை ஓட்டம்,நீளம் தாண்டுதல்,உயரம் தாண்டுதல்,நீளம் தாண்டுதல்,குண்டு எறிதல் ,ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன..

போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கோவை வருவாய் மாவட்ட விளையாட்டு போட்டி குழு,துணை செயலாளர்கள் சைமன் துரை,கெம்புராஜ்,தண்டபாணி,ஐஸ்வர்யா,சுகன்யா ஆகியோர் இணைந்து செய்தனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *