தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரி என் எஸ்எஸ். சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி நிறுவனச் செயலர் கம்பம் என் இராமகிருஷ்ணன் தலைமையில் இணைச் செயலாளர் ஆர் வசந்தன் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது கல்லூரியின் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் ஆர் தமிழ்ச்செல்வி அனைவரையும் வரவேற்று பேசினார்

கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா வாழ்த்துரை வழங்கினார் Wesghats finance limited தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எஸ் என் பார்த்திபன் மற்றும் தேனி பசுமலை பவுண்டர் சமூகப் பணியாளர் பி.சர்ச்சில் துரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசும்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் நன்மைகள் அவற்றை எவ்வாறு செயல்படுத்துவது தகவல்களை எவ்வாறு கேட்டு தெரிந்து கொள்வது எவ்வாறு விண்ணப்பிப்பது மேல் முறையீடு செய்வது இந்தத் திட்டங்களின் நன்மைகள் குறித்து மாணவிகளுக்கு புரியுமாறு விளக்க பேசினார்கள்

மேலும் மாணவிகள் இந்த சட்டங்கள் குறித்து அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமாக பதில் அளித்தார்கள் இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் அனைத்து துறை மாணவிகளும் பேராசிரியைகளும் பங்கேற்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து அறிந்து பயன் பெற்றனர் கல்லூரியின் என் எஸ் எஸ் திட்ட அலுவலர் டாக்டர் ஏ சரண்யா நன்றி கூறினார் கல்லூரி என் எஸ் எஸ் திட்ட அலுவலர்கள் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *