பெரம்பை: விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பெரம்பை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் எட்டாம் ஆண்டு நவராத்திரி விழாவை முன்னிட்டு, இரண்டாம் நாள் பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, ஆலயத்தில் கொலு வைக்கப்பட்டிருந்த சுவாமி திருவுருவங்களுக்கு முன்பாக பக்திப் பரவசத்துடன் பக்திப் பாடல்களைப் பாடி வழிபட்டனர். தொடர்ந்து, சுவாமிகளுக்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பல்வேறு பிரசாதங்கள் படைக்கப்பட்டன.
மேலும், சுமங்கலிப் பெண்களுக்கு வழங்கும் வகையில் தாலிச்சரடு மற்றும் குங்குமம் வைத்து வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தீபாராதனை நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
நவராத்திரி விழாவையொட்டி ஆலயத்தில் பக்தி நிறைந்த சூழல் நிலவியது. பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டுச் சென்றனர்