வீடு கட்டுபவர்கள் டைல்ஸ்களை எளிதாக தேர்வு வகையில் கோவையில் நவீன சுரபி பில்டு மார்ட் லக்ஸ் ஸ்டுடியோ
நூற்றுக்கும் மேற்பட்ட டைல்ஸ்,கிரானைட் டிசைன்களுடன் கொண்ட பிரம்மாண்ட ஷோரூம் கோவை தடாகம் சாலையில் துவக்கம் வீடு மற்றும் அலுவலகம், உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகளில் முக்கிய இடம் வகிக்கும் டைல்ஸ் மற்றும் கிரானைட் கற்கள் விற்பனையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களின் நன் மதிப்பை பெற்ற நிறுவனமாக சுரபி டைல்ஸ் செயல்பட்டு வருகிறது..
கோவை ,தடாகம் சாலையில் செயல்பட்டு வரும் சுரபி டைல்ஸ் விற்பனையகம் தற்போது மாறி வரும் நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்ற வகையில் தனது விற்பனை மையத்தை நவீன படுத்தி உள்ளனர்..
அதன் படி தடாகம் பிரதான சாலையில் சுரபி பில்டு மார்ட், லக்ஸ் ஸ்டுடியோ என்ற பெயரில் புதிய கிளை துவக்க விழா நடைபெற்றது…இத்துவக்க விழாவில் நடிகர் ரகுமான் கலந்து கொண்டார்.
கட்டுமானம் தொடர்பான பொருட்கள் அனைத்தும் கிடைக்கும் வகையில் துவங்கப்பட்டுள்ள சுரபி பில்ட் மார்ட் லக்ஸ் ஸ்டுடியோவில் டைல்ஸ், கிரானைட், மற்றும் வீடுகள் கட்டுமானம் தொடர்பான பொருட்கள் விற்பனை செய்ய உள்ளதாக நிர்வாக பார்ட்னர் பங்கஜ் ஜெயின் தெரிவித்தார்..
புதிய லக்ஸ் ஸ்டுடியோ மையத்தில் வாடிக்கையாளர்கள் எளிதாக அவர்களே டைல்ஸ் டிசைன்களை தேர்வு செய்யும் வகையில் டிஸ்பிளே செய்யப்பட்டுள்ளதாகவும்,பொறியாளர்கள் மற்றும் கட்டுமான துறை சார்ந்தவர்கள்,வீடுகள் கட்டுபவர்களுக்கு பொருட்கள் குறித்த நேரத்தற்கு கிடைக்கும் வகையில் விரைவான சேவைகளை வழங்குவதாக அவர் தெரிவித்தார்…