ஈரோடு
ஈரோடு கே கே நகர் பகுதியில் முதல்வர் பதிப்பகம் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் விஜய பாலாஜி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். உடன் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆனந்த் மோகன், சண்முகம் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர்.
தொழிலதிபர் அக்னி ஸ்டில்ஸ் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர் இந்த நூலகம் சுமார் 3 கோடி மதிப்பீட்டில் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டு இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்நூலகத்தை காண்ட்ராக்டர் ஈரோடு எஸ்.கே இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் உரிமையாளர் வி. செந்தில்குமார் வடிவமைத்தார் இந்த நூலகத்தில் முற்றிலும் குளிர்சாதன வசதி கம்ப்யூட்டர் வசதி மற்றும் அரசு தேர்வு எழுதும் மாணவ மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் உள்ளிட்டவை அடங்கிய டிஜிட்டல் நூலகமாக அமைந்துள்ளது. இந்த நூலகத்தை கேகே நகர் பகுதி மக்கள் ஏராளமானோர் வந்து பார்வையிட்டு சென்றனர்.
விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் விஜய பாலாஜி அவர்கள் கூறுகையில் மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவின் பேரில் இந்த நூலகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது இது மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் அவர்கள் அறிவை வளர்த்து நமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்த முதல்வர் பதிப்பகம் நவீன வசதிகள் செய்யப்பட்டு டிஎன்பிஸ்சி போன்ற தேர்வுக்கு சுமார் ஒரு 30, 40 மாணவர்கள் இங்கு அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவும் அமைச்சர் தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் எஸ் கே இன்ஃப்ராஸ்ட்ரக்சர் வி.செந்தில்குமார் அமைச்சர் மற்றும் எம்எல்ஏக்கள் மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் அனைவரையும் பூங்கொத்து கொடுத்து வரவேற்று சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார்.