பேராவூரணி. அக் 31
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், செங்கிப்பட்டி பஞ்சாயத்தில் அமைந்துள்ள இலவச கற்றல் மையத்தில், சில்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு “நல்லொழுக்கம் நிறைந்த மனம், ஒளிமயமான எதிர்காலம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை திருமதி லலிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில்,….
மாணவர்களிடையே நேர்மை, அன்பு, பொறுப்புணர்வு, சுயகட்டுப்பாடு மற்றும் பிறரிடம் கருணையுடன் நடந்து கொள்வது போன்ற நல்லொழுக்க பண்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இன்று நாம் கற்கும் நற்பண்புகள்தான் பிற்காலத்தில் நாம் நன்றாக வாழ்வதற்கு அடித்தளமாக அமையும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார் இந்நிகழ்ச்சியை சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக தஞ்சாவூர் மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சா.அந்தோணி ராஜ் ஏற்பாடு செய்திருந்தார்.
பேராவூரணி நீலகண்டன்