அரியலூர் மாவட்ட பத்திரம் நகல் எழுதுவோர் சங்கம் மற்றும் முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்தது அரியலூர் பெரம்பலூர் மாவட்ட சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி தங்கராசு ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்

அண்ணாதுரை ஷேர்கான் ஆகியோர் அனைவரையும் வரவேற்று பேசினார்கள் அரியலூர் தங்கராசு தங்கதுரை முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் வஜ்ரவேல் துறையூர் கார்த்திகேயன் ராமராஜ் உப்பிலியாபுரம் சம்பத் செந்துறை ஜெயராமன் இரும்புலிக்குறிச்சி ராஜேந்திரன் கீழப்பழுவூர் பாண்டியன் தங்க சுரேஷ் அரியலூர் கோ தங்கையன் கணேசன், மஞ்சமுத்து தென்பகுதிமுத்து சங்க நிர்வாகிகள் மற்றும் ஆவண எழுத்தர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

சுமார் 2 மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது தமிழக அரசே பதிவு துறையை தனியார் மயம் ஆக்காதே தமிழக அரசே ஸ்டார் 3.0 தனியார் வசம் டெண்டர் விடுவதை ரத்து செய் பதிவு துறையை தனியார் மயமாக்குவதை நிறுத்து சேவை கட்டன வருவாயில் பெரும் பகுதி தனியார் நிறுவனங்களுக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் நலனும் ஆவண எழுத்தார்கள் வழக்குரைஞர்கள் உள்ளிட்டோர் வாழ்வாதாரமும் பாதிக்கப்படலாம் என்கின்ற நிலை உருவாகியுள்ளது கணினி மயமாக்கலை வரவேற்கிறோம் தனியார் மயமாக்கலை எதிர்க்கிறோம் என்பன போன்ற கோரிக்கைகளை வழியுருத்தி இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 2 மணி நேரம் நடந்தது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *