கல்பாக்கம் நவ7
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் கிராமம் நெய்தல் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மிக சிறப்பாக நடைபெற்றது அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு நிறுவனத் தலைவர் ஜெயமாலினி தலைமை தாங்கினார்

துணைத் தலைவர் இந்துமதி செயலாளர் கே கோபி பொருளாளர் ஏ ஐயப்பன் சமூக ஆர்வலர் டில்லி சுடர்மணி கே கருணாகரன் மற்றும் ச.நந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் சிறப்பு விருந்தினர்களாக ஆர் தென்னரசு மற்றும் எழுத்தாளர் அகநம்பி தி பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சியில் மாணவர்களின் பல்வேறு திறன்களை மேம்படுத்தும் வகையில் பேச்சு போட்டி கட்டுரை போட்டி ஓவியப்போட்டி நடன போட்டி ஆகியன நடத்தப்பட்டது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி உபகரண பொருட்கள் மற்றும் ஐந்து நபர்களுக்கு காசோலை வழங்கப்பட்டது இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *