தீபாவளித் திருநாளை முன்னிட்டு, லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி விஷன், கதிரொளி வெல்னஸ் சென்டர் சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் நலத்திட்ட நிகழ்ச்சி கருண்டபம் விஸ்வாஸ் நகரில் நடைபெற்றது.
கதிரொளி வெல்னஸ் சென்டர் நிர்வாகியும், லயன்ஸ் கிளப் வட்டாரத் தலைவருமான சரவணன் முன்னிலையில் லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி விஷன் தலைவர் ஹேமலதா, சங்க செயலரும், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான யோகா ஆசிரியர் விஜயகுமார், ஸ்ரீ சக்ரா இயற்கை மருத்துவமனை மருத்துவர் கௌதம் உள்ளிட்டோர் நகரின் தூய்மையைப் பாதுகாப்பதில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு, அன்றாடம் உழைத்து வரும் தூய்மைப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டி, அவர்களுக்கு தீபாவளிப் புத்தாடைகள் வழங்கி மகிழ்விக்கப்பட்டனர்.
பண்டிகைக் காலங்களில் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வேளையில், நகரின் தூய்மையைப் பேணுவதற்காகத் தொடர்ந்து பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களையும் மகிழ்ச்சியில் பங்கேற்கச் செய்வதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.தூய்மைப் பணியாளர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் சமூகத்தின் ஆரோக்கியத்திற்கும், நகரின் அழகிற்கும் அடித்தளமாக விளங்குகின்றன.
அவர்களின் சேவையை மதித்து, உரிய மரியாதையும் அன்பும் வழங்குவது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.தீபாவளி என்பது புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்வது மட்டுமல்ல; நம்மைச் சுற்றியுள்ள உழைப்பாளர்களின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதே உண்மையான பண்டிகைக் கொண்டாட்டம் ஆகும்.தூய்மைப் பணியாளர்களின் முகங்களில் மகிழ்ச்சியை மலரச் செய்த லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி விஷன் நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் பொதுமக்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.