நாகப்பட்டினம்,நவ.10-
நாகை மாவட்டம் திருமருகல் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் முகமது சாதிக் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தோட்டக்கலைப் பயிர்களின் பரப்பளவை அதிகரித்து, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில், 2026–27 ஆம் ஆண்டிற்கான மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பல்வேறு தோட்டக்கலைத் திட்ட இனங்களுக்கு மானிய உதவிகள் வழங்கப்பட உள்ளன. திருமருகல் வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று தங்களது தோட்டக்கலைப் பயிர்களில் புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்றி கூடுதல் வருமானம் பெறலாம்.
திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் மானிய விவரங்கள்
மருத்துவ குணம் கொண்ட மூலிகைப் பயிர்கள் பரப்பு விரிவாக்கம் – 40% மானியம், அதிகபட்சம் ஹெக்டேருக்கு ரூ.18 ஆயிரம். பாரம்பரிய காய்கறிப் பயிர்கள் பரப்பு விரிவாக்கம் – 40% மானியம், அதிகபட்சம் ஹெக்டேருக்கு ரூ.24 ஆயிரம். தர்பூசணி பரப்பு விரிவாக்கம் – 40% மானியம், அதிகபட்சம் ஹெக்டேருக்கு ரூ.24 ஆயிரம். புளிய மரம் பரப்பு விரிவாக்கம் – 40% மானியம், அதிகபட்சம் ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம். மல்லிகை பரப்பு விரிவாக்கம் – 40% மானியம், அதிகபட்சம் ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம். தென்னை பரப்பு விரிவாக்கம் – 50% மானியம், அதிகபட்சம் ஹெக்டேருக்கு ரூ.14 ஆயிரம். காய்கறி விதை விநியோகம் – 75% மானியம், ஒரு தொகுப்பு ரூ.45. பழச்செடித் தொகுப்பு விநியோகம் – 75% மானியம், ஒரு தொகுப்புக்கு ரூ.75. தென்னந்தோப்புகளில் வாழை ஊடுபயிர் சாகுபடி – 50% மானியம், அதிகபட்சம் ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம். புதிதாக நடவு செய்த தென்னையில் காய்கறி போன்ற பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்தல் – 50% மானியம், அதிகபட்சம் ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம். தென்னை சுருள் வெள்ளை ஈ மேலாண்மை – 50% மானியம், அதிகபட்சம் ஹெக்டேருக்கு ரூ.1,790.தென்னையில் உற்பத்தித் திறனை அதிகரிக்க தென்னை டானிக் வழங்குதல் – 75% மானியம், அதிகபட்சம் ஹெக்டேருக்கு ரூ.1,800. வெற்றி இல்லத்தரசி வீட்டுத்தோட்டம் – மாடித்தோட்டத் தளைகள் விநியோகம் – 50% மானியம், ஒரு தளைக்கு ரூ.725 மற்றும் மாடியில் நிழல்வலைக்கூடம் அமைத்தல் (100 சதுர அடி) – 50% மானியம், ஒரு அலகுக்கு ரூ.3,500.தமிழ்நாடு தளிர் கன்றுகள் வளர்ப்புத் திட்டம் – 50% மானியம், ஒரு எண்ணுக்கு ரூ.600. மேற்கண்ட திட்ட இனங்களில் பயன்பெற விரும்பும் திருமருகல் வட்டார விவசாயிகள் தங்களது நில ஆவணங்கள், ஆதார் அட்டை, நில ஆவணங்கள் மற்றும் புகைப்படத்துடன் சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், இத்திட்டங்கள் தொடர்பான தகுதிகள் மற்றும் பயன்பெறும் வழிமுறைகளை அறிய வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை நேரில் அணுகி விவசாயிகள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நாகை தாலுக்கா செய்தியாளர் T. சரவணன்