ந.மணிவண்ணன் செய்தியாளர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மாதம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா வயது 27 இவருடைய மனைவி மாரி இவர்களுக்கு கனி வயது (5) எனும் பெண் குழந்தையும் தருண் வயது (4 )எனும் மகனும் உள்ளனர் இவர்கள் இருவரும் வெள்ளிச்சந்தை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர் தினமும் இவர்கள் பள்ளி வேனில் வீட்டில் இருந்து பள்ளிக்குச் சென்று வருவது வழக்கம் தீபாவளி தொடர் விடுமுறை முடிந்து நேற்று வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் இருவரும் மாலையில் வேனில் வீட்டிற்கு வந்தனர்

வேனில் இருந்து இறக்கி விடப்பட்ட குழந்தைகள் எதிரே சாலையை கடப்பதற்கு வேன் முன்பு செல்லும் பொழுது இதை கவனிக்காத டிரைவர் வேனை இயக்கியதாக தெரிகிறது இதில் வேனின் பின் சக்கரம் மாணவன் தருண் மீது ஏறி இறங்கியது சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தான் அவனது அக்கா கண் முன்னே இந்த சோகமான நிகழ்வு நடந்துள்ளது அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததைக் கண்டு டிரைவர் தப்பி ஓடி பாலக்கோடு காவல் நிலையத்தில் சரணடைந்தார் பாலக்கோடு போலீசாருக்கு தகவல் வந்ததை யடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *