தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தனி விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
அவருக்கு வாகைகுளம் விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷு மகாஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கார் மூலம் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரிக்குச் சென்றார். அங்கு நடைபெற்ற கல்லூரியின் 75-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் 105-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற விழா நிகழ்ச்சியிலும் இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
துணை ஜனாதிபதியின் தூத்துக்குடி வருகையின்போது மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்று வரவேற்பு அளித்தனர்.