தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா இனிதே நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை அழகம்மாள் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். முதுகலைத் தமிழாசிரியை சுமத்திரா மற்றும் மாணவிகள், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சிறப்புகள் மற்றும் குழந்தைகள் தினத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து, கடத்தூர் வருவாய் ஆய்வாளர் தலைமையில், தமிழக முதல்வர் விஜய்யின் சீரிய திட்டத்தின் கீழ் ஏற்கெனவே வழங்கப்பட்ட கேக் மற்றும் கால அட்டவணை அட்டைகள் மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.
விழாவின் நிறைவில் உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.