செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மொரப்பாக்கம்:

மொரப்பாக்கம் கிராமத்தில் எஸ்.ஆர்.எம். வேளாண்மை அறிவியல் கல்லூரியின் சார்பில் பங்கேற்பு ஊரக மதிப்பீடு (Participatory Rural Appraisal – PRA) செயல்விளக்க நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

கே.என். சிங் குழுவின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், கிராமத்தின் வேளாண்மை நிலவரம், விவசாயிகளின் வாழ்வாதாரம், இயற்கை வளங்கள், நீர்வள ஆதாரங்கள் மற்றும் கிராமத்தின் அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றை விவசாயிகளின் நேரடி பங்கேற்புடன் கண்டறிந்து மதிப்பீடு செய்வதாகும்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற வேளாண் கல்லூரி மாணவர்கள் கிராம மக்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, கிராமத்தின் வளங்கள், வேளாண்மையில் நிலவும் சவால்கள் மற்றும் விவசாயிகளின் தேவைகள் குறித்து பல்வேறு தகவல்களைச் சேகரித்தனர்.

மேலும், பங்கேற்பு ஊரக மதிப்பீட்டு முறைகளைப் பயன்படுத்தி கிராமத்தின் சமூக மற்றும் வேளாண் சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு, நேரடி கள அனுபவத்தையும் பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ, சுதீர், அஷ்வின், லோகேஷ், சிவன்ராஜ், ஆகாஷ், விக்னேஷ், கலைவாணன், வீரேந்திரன், தினேஷ்பாபு, ஆரிதாஸ், புவனேஸ்வரன் உள்ளிட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சி மாணவர்களுக்கு கிராமப்புற மக்களின் வாழ்க்கை முறை, விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் வேளாண் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து நேரடியாக அறிந்துகொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

கிராமப்புற வளர்ச்சியையும், விவசாயிகளின் வாழ்வாதார முன்னேற்றத்தையும் நோக்கமாகக் கொண்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சி சிறப்பாக நிறைவடைந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *