அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் நடைபெற்றன.
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே நடைபெற்ற இப்போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மிருணாளினி அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வகுமார், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகோபால், கோட்டாட்சியர் பிரேமி, மாவட்டக் கல்வி ஆய்வாளர் பழனிச்சாமி உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகள் மூலம் மாணவ, மாணவிகளிடையே விளையாட்டு ஆர்வத்தையும், உடல் ஆரோக்கியத்தையும், விளையாட்டுத் திறனையும் ஊக்குவிக்கும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது.