தென்காசி மாவட்டத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் ரோந்து பணி மற்றும் வாகன தணிக்கை தீவிர படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக-கேரளா எல்லையில் அமைந்துள்ள புளியரை சோதனை சாவடியில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவ்வழியாக கேளாவில் இருந்து வந்த லாரியை சோதனை செய்ததில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வந்த கேரள மாநிலம் புஷ்பமங்களம் பகுதியை சேர்ந்த சாஜி என்பவரின் மகன் சரத்குமார் (வயது 35) என்ற நபரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கடத்திவரப்பட்ட ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான சுமார் 10 கிலோ கஞ்சா மற்றும் கடதலுக்கு பயன்படுத்திய கனரக வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது போன்ற சட்ட விரோத செயல்கள் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை