அரியலூர் மாவட்ட பத்து ரூபாய் இயக்கம் சார்பில் அரியலூர் அண்ணா சிலை முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது அரியலூர் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை வென்றெடுக்க கோரி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரெ செல்லபாண்டியன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார் மாவட்ட அமைப்பாளர் பொறியாளர் கலையரசன்குப்புசாமி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார் மாவட்ட நிர்வாகிகள் க நீலகண்டன் பஞ்சநாதன் கணபதி ஜி சுப்பிரமணியன் டி வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
மாநில விவசாய அணி செயலாளர் மா பாலகிருஷ்ணன் கோரிக்கை உரையாற்றினார் அமைப்பின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் முனைவர் நல்வினைவிஸ்வராஜி மாநில செயலாளர் வழக்கறிஞர் கே சதீஷ்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் பழனிசாமி மகேந்திரன், சரவணன் அமுதா ஷேக்நிஜாம்முகமது பொன் புகழேந்தி குருநாதன் ஜெய்சங்கர் கோவிந்தன் அசோக் அழகர் சுரேஷ் ராமசாமி பழனிமுத்து சதீஷ்குமார் ஆ சரவணன் செ பு ஜீவானந்தம் உட்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்
மாவட்ட செயலாளர் க சரவணன் அனைவருக்கும் நன்றி கூறினார் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிமெண்ட் தொழிற்சாலைகளின் கனரக வாகனங்கள் பொதுமக்களுக்கான சாலையை பயன்படுத்தாமல் தனிச்சாலை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அரியலூர் மாவட்டதில் சுண்ணாம்பு நீரால் பொதுமக்களுக்கு கிட்னி பொது மக்களுக்கு ஏற்படும் கிட்னி பாதிப்புகளை தடுத்திட தொழிற்சாலைகள் சி எஸ் ஆர் நிதியிலிருந்து ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்திட வேண்டும் பத்திர எழுத்தர்கள் முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் பத்திரப்பதிவு பணியில் ஈடுபட்டு வருபவர்கள் அனைவரது வாழ்வாதாரத்தை பாதிக்கும் மாடல் ரிஜிஸ்டேஷன் ஹப் திட்டத்தினை மாநில அரசு கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுரித்தி இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 2 மணி நேரம் நடந்தது