புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் கந்த சஷ்டி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதன் ஆறாம் நாள் திருவிழாவை முன்னிட்டு, சுவாமியின் அருகில் அமைந்துள்ள சக்திவேலுக்கு பால், பன்னீர், சந்தனம், புஷ்பம், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சக்திவேலுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
அப்போது ஆலயத்தில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் “அரோகரா! அரோகரா!” என முழக்கமிட்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, திரளான பக்தர்கள் ஒன்றிணைந்து முருகப்பெருமானின் பெருமைகளைப் போற்றும் கந்த சஷ்டி கவசத்தை பக்தியுடன் பாராயணம் செய்து வருகின்றனர். இவ்விழாவில் ஏராளமான பொதுமக்களும் முருக பக்தர்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.