தேனி மாவட்டம், கம்பம் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள புதுக்குளம் பகுதியில் யாதவர் மகா சபை சார்பில் ஸப்த கன்னிமார் கோவில் மற்றும் ஆதிசேஷன் சுவாமி கோவில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், இக்கோவில்களில் ஸப்த கன்னியர் மற்றும் அல்லல் தீர்க்கும் ஆதிசேஷன் சுவாமி சிலைகளுக்கான பிரதிஷ்டை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை நடத்தினர். தொடர்ந்து யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் அடங்கிய கும்ப கலசங்களை வேத மந்திரங்கள் முழங்க எடுத்து வந்து, ஸப்த கன்னியர் மற்றும் அல்லல் தீர்க்கும் ஆதிசேஷன் சுவாமி சிலைகளுக்கு புனித நீர் ஊற்றி பிரதிஷ்டை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ஸப்த கன்னியர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவை சைவ உணவு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *