எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த பூம்புகார் கடற்கரைப் பகுதிகளில் கடலோர மண்ணரிப்பைத் தடுக்கவும், கடல் நீர்மட்ட உயர்விலிருந்து கடலோரக் கிராமங்களைப் பாதுகாக்கவும் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, பூம்புகார் கடற்கரைத் துறைமுகப் பகுதியில் இயற்கை மண் மேடுகளை உருவாக்கும் நோக்கில் புவி காப்பு அறக்கட்டளை மற்றும் லயன்ஸ் சங்கம் ஆகியவை இணைந்து பனை விதைகள் நடும் பணியை மேற்கொண்டன. புவி காப்பு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ரமேஷ் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளரும், பூம்புகார் திமுக சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம். முருகன் கலந்துகொண்டு பனை விதைகளை நட்டு வைத்துப் பணியைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ரவி , ஒன்றிய செயலாளர் பிரபாகரன் மீனவ கிராமப் பஞ்சாயத்தார்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.