ஸ்ரீ பதல்சந்த் சாயர்சந்த் சோர்டியா ஜெயின் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி தனது 100-வது ஆண்டு நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஆலந்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் அமைந்திருக்கும் பத்மஸ்ரீ மோகன்முல் சோர்டியா உள்விளையாட்டு அரங்கில், பாரத் புவன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் (Bharat Bhuvan Book of Records) அமைப்புடன் இணைந்து பிரம்மாண்டமான உலக சாதனை நிகழ்வை நடத்தியது.

இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, பள்ளியின் அனைத்து மாணவர்களும் ஒன்றிணைந்து, கைகளில் ஒளிவிளக்குகளை ஏந்தி, மனித உருவ அமைப்பின் மூலம் பள்ளியின் அதிகாரப்பூர்வ இலச்சினையை உருவாக்கினர்.

இதற்காகப் பிரத்யேகமாக இசையமைக்கப்பட்ட இசைக்கு ஏற்ப மாணவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்த உலக சாதனை முயற்சியை வெற்றிகரமாக நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அமலாக்க இயக்குநரகத்தின் முன்னாள் உதவி இயக்குநரும், தேசிய அளவிலான வாலிபால் வீரரும், பிரசிடென்ட் விருது மற்றும் WCO சர்வதேச விருது பெற்றவருமான திரு. ஏ. சந்திரசேகரன் கலந்து கொண்டார்.

கௌரவ விருந்தினர்களாக சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான நீதியரசர் எஸ். பாஸ்கரன் மற்றும் இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறையைச் சேர்ந்த வருமான வரித்துறை ஆணையர் திரு. வி. நந்தகுமார், IRS ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

மாணவர்களின் இந்த மாபெரும் ஒருங்கிணைந்த முயற்சியை விருந்தினர்கள் நேரில் பார்வையிட்டு பாராட்டினர். அவர்களின் முன்னிலையில், பாரத் புவன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பின் சார்பில் இந்நிகழ்வு உலக சாதனையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் பள்ளியின் நூற்றாண்டு விழா வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை நிகழ்வாக அமைந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *