பேராவூரணி, நவ.18-
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம்,மணக்காடு கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட குளக்குடி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

முகாமை, பேராவூரணி வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன்,பட்டுக்கோட்டை கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் டாக்டர் விஜயராகவன், ஆகியோர் பார்வையிட்டு, கால்நடை வளர்ப்பாளர்களுடன் கலந்துரையாடினர். அப்போது சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

முகாமில் ஆரோக்கியமான கிடாரிக் கன்றுகளை வளர்த்தவர்களுக்கும், சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளைப் பின்பற்றும் விவசாயிகளுக்கும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.முகாமில் பங்கேற்ற அனைத்து கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் CO-4 தீவனப் புல் கரணைகள் மற்றும் தீவனச் சோள விதைகள், தாது உப்புகள் வழங்கப்பட்டன.முகாமில் கால்நடை மருத்துவர்கள் ராஜீவி, சுரேஷ், அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினர்.ஆவின் சார்பில் பெருமகளூர் ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கச் செயலாளர் பேதையன் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பேராவூரணி
த.நீலகண்டன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *