S. செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால்
காரைக்கால், நவ.19-
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்களை அரசே நேரடியாக வழங்க ஏதுவாக நிதி ஒதுக்கீடு செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
புதுச்சேரி அரசு நிதித்துறை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை வெளியிடும் அனைத்து உத்தரவுகளும் உள்ளாட்சி ஊழியர்களுக்கும் பொருந்தும் எனும் நிலையான உத்தரவை உள்ளாட்சித் துறை வெளியிட வேண்டும்
என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் உள்ளாட்சித்துறை அலுவலகம் முன்பு புதுச்சேரி மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்களின் கூட்டு போராட்டக்குழு கன்வீனர் ஐயப்பன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைப்பிரதேச அரசு ஊழியர்கள் சம்மேளன தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன், பொருளாளர் மயில்வாகனன் மற்றும் நிர்வாகிகள்
கண்டன உரையாற்றினர்.