நாகப்பட்டினம்,நவ.19-
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட வளாகத்தில் ஆதார் திருத்த சிறப்பு முகாம் இன்று. நாகப்பட்டினம் தலைமை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் லெட்சுமி உத்தரவின் பேரில் நடைபெற்ற முகாமிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி ஹரிகிருஷ்ணன் தலைமை தாங்கி முகாமினை தொடங்கி வைத்தார்.
முகாமில் புதிய ஆதார் பதிவு செய்தல், 5 மற்றும் 15 வயதில் புகைப்படம், கைரேகை, கருவிழி பதிவு, முகவரி திருத்தம், செல்போன் எண் மாற்றம், பிறந்த தேதி திருத்தம், பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஊராட்சி செயலர் பிரபாகரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முகாமில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.