பவானிசாகர்:
முன்னாள் பாரதப் பிரதமர் அம்மையார் இந்திரா காந்தியின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு, பவானிசாகர் அருகே தொட்டம்பாளையத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அறக்கட்டளை அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பெருந்தலைவர் காமராஜர் அறக்கட்டளையின் தலைவர் ஆர். நடராஜ் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் எஸ்சி, எஸ்டி பிரிவின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.சி. சங்கர், மாவட்ட மீனவர் அணித் தலைவர் ஏ. சந்திரசேகரன், மாவட்ட எஸ்சி, எஸ்டி பிரிவுத் தலைவர் மா. சுரேஷ் பிரபுதாஸ், மகளிர் அணி சார்பில் ராஜம்மாள் நல்லசாமி, ஓபிசி தொகுதித் தலைவர் மகேந்திரன், எஸ்சி, எஸ்டி பிரிவின் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதித் தலைவர் கே. சண்முகம், பவானிசாகர் பேரூராட்சி வர்த்தகப் பிரிவுத் தலைவர் வி. சங்கர், தொட்டம்பாளையம் மண்டலத் தலைவர் பி. சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், டி. காளிசாமி, ஆறுமுகம், கண்ணையன், மல்லையன், கிட்டான், மணியன், மீனவர் அணி குமார், இந்திரா நகர் வடிவேல், உத்தண்டியூர் கிராம காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பாரதி, முருகன், சாமிநாதன், குமார், சின்ராஜ், டி. வரதன், பவானிசாகர் ராஜா உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
அனைவரும் இந்திரா காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அவரது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினர்.