காஞ்சிபுரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை தகவல் மையத்தில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த எலும்பியல் மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வீரபாகு முத்துசாமி, காது, மூக்கு, தொண்டை மற்றும் தலைச்சுற்றல் சிறப்பு மருத்துவர் டாக்டர் அகல்யா பாலின் வசந்தி ஆகியோர் நோயாளிகள் மற்றும் பொதுமக்களைப் பரிசோதித்து பல்வேறு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
இதில் முழங்கால், தோள்பட்டை, கழுத்து மற்றும் முதுகுவலி, மூட்டு அழற்சி, எலும்பு முறிவு, தசைநார் காயங்கள், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, முதுகெலும்புப் பாதிப்புகள் உள்ளிட்ட எலும்பியல் பிரச்சினைகளுக்கும், காது கேளாமை, காதுவலி, காதில் இரைச்சல், தலைச்சுற்றல், மயக்கம், மூக்கு அடைப்பு, சைனஸ் தொற்று, தொண்டை வலி, விழுங்குவதில் சிரமம், குரல் மாற்றம் உள்ளிட்ட காது, மூக்கு, தொண்டை பாதிப்புகளுக்கும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மேலும், நோயாளிகள் தங்களது உடல்நலப் பிரச்சினைகள் குறித்து மருத்துவர்களிடம் நேரடியாகக் கேட்டறிந்து, உரிய சிகிச்சை முறைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய மருத்துவப் பரிசோதனைகள் குறித்த வழிகாட்டுதல்களையும் பெற்றனர்.
காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சென்னைக்கு நேரடியாகச் செல்லாமல் அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவச் சேவைகள் குறித்த தகவல்களையும், மருத்துவ ஆலோசனைகளையும் எளிதில் பெறுவதற்கு இந்த அப்பல்லோ தகவல் மையம் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் மருத்துவர்கள் கூறுகையில்,
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் போன்ற பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து கட்டுப்பாட்டில் வைத்திருப்பது இதய நோய் மற்றும் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும். எனவே, நோய் முற்றிய பிறகு சிகிச்சை பெறுவதைவிட ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம். பொதுமக்கள் அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அப்பல்லோ மருத்துவமனை ஊடகத் தொடர்பாளர் எஸ். பாலாஜி செய்திருந்தார்.