எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சமூக வலைதளத்தில் வைரலான ரசிக்க வைக்கும் வீடியோ.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் தேசிய பறவையான மயில் அதிகரித்து காணப்படுகிறது. கொள்ளிடம் மற்றும் கடற்கரையோர கிராமங்களில் அதிக அளவில் மாங்குரோவ் மற்றும் சவுக்கை மரக்காடுகள் அதிகரித்து காணப்படுவதால் இப்பகுதிகளில் மயில்கள் இனப்பெருக்கம் அதிகரித்துகனப்படுகிரது

கிராம பகுதிகளில் வீடுகளில் செல்லப்பிராணியாக வளரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சீர்காழி அருகே எடமணல் மேலப்பாளையம் கிராமத்தில் சாலையில் இரண்டு ஆண் மயில்கள் கடும் கோபத்துடன் சண்டையிட்டு கொண்ட காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.சுமார் ஒரு மணி நேரமாக இரு மயில்கள் சண்டையிடுவது போல் உள்ள காட்சியை அப்பகுதி மக்கள் கண்டு ரசித்ததுடன், பலர் அதனை தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்னர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *