கோவை மாவட்டம் வால்பாறையில் மனித- யானைகள் மோதலை தடுக்கவும் யானைகளுடனான இணக்கமான வாழ்வை மேம்படுத்தவும் யானைகளின் நடமாட்டத்தை அறிந்து அதை முன்கூட்டியே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தெரிவித்து பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக டிஜிட்டல் தொழில் நுட்பத்தாலான அறிவிப்பு பலகைகள் ஐயர் பாடி, சிறு குன்றா மற்றும் குரங்குமுடி ஆகிய மூன்று இடங்களில் நிறுவப்பட்டு அதனை ஒருங்கிணைத்து ஐயர்பாடியிலுள்ள அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கிளவுட் தளத்தை பயன் படுத்தி கருவி மூலம் உடனுக்குடன் தகவல்களை தெரிவிக்கும் வகையில் அதன் அமைப்பை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் ஆ.சுதாகர் தொடங்கி வைத்தார்
நேச்சர் கன்சர்வேஷன் பவுண்டேசன் அமைப்பு, ஆனைமலை புலிகள் காப்பகத்துடன் இணைந்து முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவன சமூகப் பொறுப்புணர்வு ஆதரவுடன் செயல்படுத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் காவல் உதவி ஆய்வாளர் வேல்முருகன், முத்தூட் ஃபைனான்ஸ் தலைமை அலுவலக சி.எஸ்.ஆர்.மேலாளர் வினய சந்திரன்,என்.சி.எஃப்.கணேஷ் ரகுநாதன், சதீஷ் குமார், சித்ரா ஆறுமுகம்,பாரி அக்ரோ பொதுமேலாளர் பாலாஜி மற்றும் உதவி பொதுமேலாளர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்
22.11.2026