தருமபுரி மாவட்ட கலைத்தாய் சிலம்பம் சார்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான சிலம்பாட்ட போட்டி தருமபுரியில் டான் சிக்சாலையா பள்ளி தர்மபுரி நடைபெற்றது. இந்த போட்டியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த சிலம்பப் போட்டியில் குத்துவரிசை, நெடுக் கம்பு வீச்சு, நடுக்கம்பு வீச்சு, இரட்டைக் கம்பு, வேல் கம்பு, சுருள் வால், வால் வீச்சு உள்ளிட்ட 8 போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் கலந்து கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அசத்திய மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. இந்தப் சிலம்பப் போட்டியில் சிறிய குழந்தைகள், மாணவிகள் என பலர் கலந்து கொண்டு பல சாகசங்களை செய்து காட்டி வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.