கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக அரசு வழங்கும் மகளீருக்கான உரிமைத் தொகை ரூ.1000 வழங்குவதற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் டோக்கன் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
இதன் ஒருபகுதியாக வால்பாறை அருகே அக்காமலை எஸ்டேட்டில் செயல்பட்டுவரும் ரோஜா மகளிர் ரேஷன் கடையின் மூலம் அக்காமலை, ஊசிமலை, வெள்ளமலை ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 449 குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்பப் படிவம் மற்றும் டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது இந்த விண்ணப்பப் படிவங்களை பெற்றுள்ள குடும்ப அட்டைதாரர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வருகிற 24 ஆம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு 60 நபர்கள் என்ற அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் வால்பாறையிலுள்ள துளசியம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெறும் முகாமில் ஆதார் அட்டை, சுமார்ட்கார்டு, மின்கட்டண ரசீது மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் மகளீர்கள் நேரில் சென்று கலந்து கொள்ளவேண்டும் என்றும் ரோஜாமகளீர் ரேசன் கடை விற்பனையாளர் கலா தங்கச்சாமி தெரிவித்துள்ளார்