தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஒன்றிய செயற்குழு கூட்டத்தில் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தி வரும் தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கந்தர்வக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஒன்றிய செயற்குழு கூட்டம் கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைப்பெற்றது.
முதல்வர் அவர்களால் செயல்படுத்தப்பட்டு வரும் காலை சத்துணவு திட்டத்திற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் 14பள்ளி கட்டிடங்கள் கட்ட ஆணை பிறப்பித்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
இக்கூட்டத்தில் ஒன்றிய தலைவர் பொறுப்பு அப்துல்ஹமீது தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சின்ன ராஜா அனைவரையும் வரவேற்று கூட்டப் பொருள் பற்றி விளக்கினார் .
மாவட்ட பொருப்பாளர் சரவணன் தலைமையாசிரியர் சிறப்புரையாற்றினார் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவா ஆசிரியர் மன்றத்தின் இளைஞர் அணி மகளிர் அணி மாநாடு குறித்து பேசினார்.
தொடர்ந்து கோவிந்தசாமி ஒன்றிய துணைச் செயலாளர் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் எடுத்து கூறினார்.
மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தராசு ஆசிரியர் மன்றத்தின் வளர்ச்சி குறித்துபேசினார்.
பொன்கலன் விளக்க உரையாற்றினார்.
கூட்டத்தில் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி தமிழரசன் மகளிர் அணியின் சார்பாக தலைமை ஆசிரியர் கள் தமிழ்ச்செல்வி, மீனாம்பாள் , ஜீலி, வனிதா, ஜோதி வின்னரசி மகளிர் மாநாடு குறித்து பேசினார்கள். நிறைவாக ஒன்றிய பொருளாளர் வெங்கடேசன் ஆசிரியர் நன்றியுரை கூறினார்.