நாமக்கல்

தமிழ்நாடு அரசு அமைக்கும் சிப்காட் டுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அக்னி சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தி அடுத்த கட்ட போராட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு. பொன்னுசாமி அலுவலகம் முன்பு முன்னாள் தமிழக முதல்வர் மு கருணாநிதியின் நூல்களை படிக்கும் நூதன போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிப்பு

நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் வளையப்பட்டி பகுதியில் தமிழ்நாடு அரசு சிப்காட் அமைப்பது குறித்து அறிவிப்பு செய்து ஆய்வு பணிகள் மேற்கொண்டு வருவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயம் முன்னேற்றக் கழகம் மற்றும் சிப்காட் எதிர்ப்பு குழு ஆகியவைகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த இவர்கள் இன்று நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள என். புதுப்பட்டி என்ற இடத்தில் இருக்கும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு முன்பு விவசாயிகள் ஆண்களும் பெண்களுமாக கூடி அக்னி சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தி சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள்
இந்த நிகழ்ச்சியில் விவசாய முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் கே பாலசுப்பிரமணியன் சிப்காட் எதிர்ப்பு குழு தலைவர் ராம்குமார் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் விவசாய அணி தலைவர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அக்னி சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்

இதுகுறித்து பேட்டியளித்த விவசாய முன்னேற்றக் கழகத்தினுடைய மாநில பொதுச் செயலாளர் கே. பாலசுப்ரமணியன் கூறும் பொழுது தமிழக அரசு இனியும் செவி சாய்க்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக இந்த போராட்டத்தை இந்த சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே பொன்னுசாமி அலுவலகத்திற்கு முன்பு விவசாயிகள் ஒன்று திரண்டு அங்கு முன்னாள் தமிழக முதல்வர் மு கருணாநிதியின் நூல்களைப் படித்து நூதன முறையில் விவசாயிகளின் சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *