பாலக்கோடு மார்கெட்டில் இன்னும் ஒரு மாதத்திற்குப் பிறகு தான் தக்காளியின் விலை குறை வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தகவல் விலை அதிகரிப்பினால் ஒரு சில விவசாயிகள் மட்டுமே மகிழ்ச்சி அடைகின்றனர்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மார்கெட்டிற்கு இரண்டு மாதங்களுக்கு பிறகு தக்காளி வரத்து தொடர்ந்து குறைவினால் விலை உயர்ந்து கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் பாலக்கோடு , காரிமங்கலம், பெல்ரம்பட்டி, பெப்பிடி, எர்ரணஹள்ளி, பேளாரஹள்ளி, சோமனஹள்ளி, சீங்காடு, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, கம்பைநல்லூர். உள்ளிட்ட பகுதிகளில் 10ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்வது வழக்கம் இதன் மூலம் சராசரியாக தினசரி 500 டன் தக்காளி விளைவிக்கப்பட்டது.

உள்ளூர் தேவைக்குப்போக தென் மாவட்டங்கள் சென்னை கேரள கர்நாடக மாநிலங்களுக்கு அனுப்புவது வழக்கம். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து அதிகபட்சமாக ஒரு கிலோ 10ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

சித்திரை மாதத்துக்குப் பிறகு வைகாசி ஆனி மாதத்தில் போதிய மழை பெய்யாததாலும், வருடத்தில் ஒரு சில மாதங்கள் மட்டுமே அதிக விலை தக்காளி விற்கப்படுவதால் இப்பகுதிகளில் விவசாயிகள் மாற்று பயிர் செய்வதில் ஆர்வம் காட்டுவதால் தக்காளி சாகுபடி மிகவும் குறைந்துள்ளது.

இதனால் தக்காளி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து கடுமையாக குறைந்துள்ளது. கொள்முதல் விலை மூன்று ரகங்களாக 15 கிலோ கொண்ட கூடை 1800 முதல் 2500 வரையும் ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் தக்காளி விலை உயர்வால் தொடர்ந்து தக்காளி பயிரிடும் ஒரு சிலர் மட்டுமே தற்போது லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்‌

தற்போது நடவு செய்யப்பட்டுள்ள தக்காளி பயிர்கள் அறுவடைக்கு அடுத்த மாதத்தில் வந்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *