மாலைப்பட்டி ஊராட்சியில் ரூ.1 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் – அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்

அலங்காநல்லூர்
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் மாலைப்பட்டி ஊராட்சியில் ரூ.1 கோடியே 6லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, நியாய விலை கடை, மற்றும் மகளிர் சுய உதவிக் குழு கட்டிடம், உள்ளிட்டவைகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சங்கீதா, தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சக்தி முருகன், யூனியன் சேர்மன் வீரராகவன், துணை சேர்மன் கார்த்திக்ராஜா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக நிர்வாகிகள், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.