அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரியஊர்சேரி கிராமத்தில் முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல்கலாம், அவர்களின் 8ஆம் -ஆண்டு நினைவு தினம் மற்றும் ட்ரீம்பாய்ஸ் நற்பணி மன்றத்தின் 18ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது

இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார் ட்ரிம் பாய்ஸ் நற்பணி மன்றத்தின் தலைவர் கனிராஜா, மற்றும் அலங்காநல்லூர் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் ராஜபிரபு, ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள பயிற்சியாளர் தேசிய விருது பெற்ற ரஞ்சித்குமார், முன்னிலை வகித்தார் இதில் சிறப்பு விருந்தினர்கள் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாமிதுரை அலங்காநல்லூர் பேரூராட்சி முன்னாள் சேர்மன் ரகுபதி, அமமுக ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர்கோடீஸ்வரன், மற்றும் ஸ்ரீனிவாசன், பாலமுரளி கிருஷ்ணன், ரதீஷ்பாபு, கலாம் கனவு இயக்கம் ராஜா, விசிக மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சிந்தனை வளவன், தொழிலதிபர்கே.எஸ்.கே.மந்திரம்
பாலா, தமிழ்நாடு வணிகர் சங்க மாநிலத் துணைத் தலைவர் தொழிலதிபர்எஸ்.டி.எம்.செந்தில்குமார் தேவசேரிஊராட்சி மன்ற தலைவர் அழகுமணி(எ) சசி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினர். தொடர்ந்து நமது நாட்டின் 76 வது சுதந்திர தின பெருவிழாவை முன்னிட்டு சுதந்திரத்துக்காக போராடிய தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தார்களை கௌரவித்து விருதுகள் வழங்கப்பட்டது

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் சர்வதேச அளவில் மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு விருதுகள் மற்றும் ஊக்க தொகை வழங்கப்பட்டது ஒன்றிய அளவில் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு விருது மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது

ஒன்றிய அளவில் அரசு பள்ளியில் விளையாட்டு துறையில் சர்வதேச மற்றும் தேசிய அளவில் சாதித்து காட்டிய மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது அரசு பள்ளியில் சிறந்த மாணவர்களை உருவாக்கிய ஆசிரியர்களுக்கு விருது வழங்குதல் ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லம் நடத்தி வருபவர்களுக்கு அவர்களின் சேவை பாராட்டி விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்குதல் நாட்டுப்புற கலையை அழியாமல் பாதுகாத்து வரும் சிறந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது

மாணவர்களுக்கு மரக்கன்று வழங்குதல் மற்றும் மரம் கன்றுகள் நடுதல் ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் ஊக்கத்தொகை வழங்குதல் கட்டுரை போட்டி பேச்சுப்போட்டி ஓவிய போட்டி விளையாட்டு போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது

தொடர்ந்து பல்சுவை மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது அதனை தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது இவ்விழா ஏற்பாடுகளை ட்ரிம் பாய்ஸ் நற்பணி மன்ற செயலாளர் ஜெயச்சந்திரன், பொருளாளர் சரவணன், மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர் ஜோதிமுருகன், உட்பட அப்துல் கலாம் ட்ரீம் பாய்ஸ் பவுண்டேஷன் நிர்வாகிகள் செய்திருந்தனர்.. பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *