எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான 33 ஏக்கர் நிலம் மீட்பு. நீதிமன்ற தீர்ப்பை அடுத்து நிலத்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோபாலசமுத்திரம் தைக்கால் பகுதியில் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான 33 ஏக்கர் நிலம் தனியாரிடமிருந்து நீதிமன்ற தீர்ப்பை அடுத்து நிலத்தை மீட்கும் பணி நடைபெற்றது அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் மீட்கப்பட்ட நிலத்தில் குப்பைகள் கொட்ட கூடாது என ஒன்று கூடி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதனை அடுத்து கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஜெயபிரகாஷ் வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் லாமேக் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது மீட்கப்பட்ட இடத்தில் குப்பைகள் கொட்டவில்லை என உத்தரவாதம் கொடுத்து எழுதிக் கொடுத்தனர்.
இதனை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும் நில அளவையர்களை கொண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான இடங்களை அளவிடும் பணி மற்றும் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு நிலத்தை கையகப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சீர்காழி துணை காவல் கண்காணிப்பாளர் லாமேக் தலைமையிலான 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.