அச்சிறுப்பாக்கம் திவான் பகதூர்ராவ் இரட்டைமலை சினிவாசன் மணிமண்டபத்தில்
மின் விளக்கு பழுது.
அச்சிறுப்பாக்கம் திவான் பகதூர்ராவ் இரட்டைமலை சினிவாசன் மணிமண்டபத்தில்
மின் விளக்குகள் கடந்த சில மாதங்களாக மின்விளக்குகள் பழுது ஏற்பட்டுள்ளதாக அம்பேத்கார் மக்கள் படை அமைப்பினர் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட மலை நகரில் அமைந்துள்ளது திவான் பகதூர் ராவ் மாவீரர் இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபம் இங்கு கடந்த சில மாதங்களாக மணிமண்டபம் மற்றும் பெயர் பலகையில் மின்விளக்குகள் சரிவர ஒளிராமல் பழுது ஏற்பட்டுள்ளதாக அம்பேத்கர் மக்கள் படை அமைப்பின் பேரூர் நகர செயலாளர்
மு.பிரசாந்த் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் புகார் மனு வழங்கினார். மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் மாவீரர் திவான் பகதூர் ராவ் இரட்டைமலை சினிவாசன் மணிமண்டபம் மேலே உள்ள பெயர் பலகை மற்றும் மண்டபம் முழுவதும் உள்ள மின்விளக்கு சீர் செய்து மீண்டும் மணிமண்டபம் பிரதிபளிக்க செய்ய
வேண்டுமென அம்பேத்கர் மக்கள் படை அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.