நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சுவாமி விவேகானந்தா மகளிர் மருந்தளுநர், செவிலியர், பிஸியோதெரபி , அலைடு ஹெல்த் சயின்ஸ் மற்றும் கல்வியில் கல்லூரிகளின் முதலாம் ஆண்டு மாணவிகளின் வகுப்புகள் தொடக்க விழா இன்று இனிதே நடைபெற்றது.

இவ்விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் மற்றும் செயலர் டாக்டர் மு கருணாநிதி தலைமை தாங்கினார். மேலாண்மை இயக்குனர் கிருஷ்ணவேணி கருணாநிதி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். துணை மேலாண்மை இயக்குனர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளர் டாக்டர் ஸ்ரீ ராகநிதி அர்த்தநாரீஸ்வரன், துணைத் தாளாளர் டாக்டர் கிருபாநிதி, இயக்குனர் டாக்டர் நிவேதனா கிருபாநிதி, நிர்வாக இயக்குனர் டாக்டர் குப்புசாமி, தலைமை நிர்வாகிகள் சொக்கலிங்கம் , திரு.ஜெயராமன், டென்டல் மற்றும் பாராமெடிக்கல் இயக்குனர் டாக்டர் (கேப்டன்) கோகுலநாதன் கல்லூரி முதல்வர்கள் டாக்டர் முருகானந்தம் , டாக்டர் சுமதி, டாக்டர் ராஜ்குமார், டாக்டர் சசிப் பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் அட்மிஷன் இயக்குநர் செளண்டப்பன் வரவேற்புரை ஆற்றினார்.

கல்லூரியின் தாளாளர் மற்றும் செயலர் டாக்டர் மு கருணாநிதி தனது சிறப்புரையில் மாணவிகள் தாங்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் இலக்கை நிர்ணயித்து முழுமனதுடன் செயல்பட வேண்டும் அப்போது தான் வாழ்வில் வெற்றி பெற முடியும் மேலும் மாணவிய செல்வங்களே நீங்கள் தடுமாறும் போது தாங்கி பிடிக்கவும் தடம் மாயமாய் உங்கள் வெற்றிக்கு வழி வகுக்கும் உற்ற நல்ல நண்பர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் பெற்றோர்கள் தங்களுடைய மகள்களுடன் நேரம் ஒதுக்கி அவர்களுடன் மனம்விட்டு பேச வேண்டும் மேலும் அவர் தனது வாழ்க்கை அனுபவங்களை மாணவிகளுடன் பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு அறிவுரை கூறினார்.

இந்த விழாவில் விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் உறுப்பு கல்லூரிகளை சார்ந்த முதல்வர்கள், துறைத் தலைவர்கள், மற்றும் பேராசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் சுமார் 4000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இறுதியாக விவேகானந்தா செவிலியர் கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் கீதா நன்றி உரையாற்றினார்.

விழா ஏற்பாட்டினை நிகழ்வு மேலாளர் ஸ்ரீதர்ராஜா செய்திருந்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *