எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே மூன்று இடங்களில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான ஊரக வளர்ச்சி மேம்பாட்டு திட்ட கட்டிடங்களை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை அமைச்சர் சி.வி.மெய்யநாதன் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த எருக்கூர் ஊராட்சி மன்ற கட்டிடம் பழுதடைந்ததை முன்னிட்டு சுமார் 42.65 லட்சம் மதிப்பீட்டில கிராம செயலக கட்டிடம், புத்தூர் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் ரூபாய் 22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டிலும், மாதானம் ஊராட்சியில் அங்கன்வாடி மைய கட்டிடம் ரூபாய் 11 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பீட்டிலும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அனைத்து பணிகளும் முடிவடைந்து இன்று திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை அமைச்சர் சிவ.வீ.மெம்யநாதன் கலந்து கொண்டு கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்து சிறப்புரையாற்றினார் அப்போது தமிழக முதல்வரின் ஏராளமான திட்டங்களை பற்றி அது வெற்றிகரமாக செயல்படுவது குறித்தும் மக்களுக்கு எடுத்துரைத்தார் அங்கன்வாடி குழந்தைகளுக்கு கட்லெட்டுகள் மற்றும் சாக்லேட்டுகள் வழங்கி மழலைச் செல்வங்களிடம் பேசி மகிழ்ந்தார் இந்நிகழ்வில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம்,மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா.எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், கொள்ளிடம் மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிக்குமார், கொள்ளிடம் ஒன்றிய பெருந்தலைவர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் திரளான தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *