நாமக்கல் அருள்மிகு காந்தமலை முருகன் ஆலயத்தில் ஆலய கும்பாபிஷேக- விழா ஆயிரக்கனக்கான பக்தர்கள் பங்கேற்ப்பு

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் சிறிய குன்றின் மேல் உள்ள அருள்மிகு காந்தமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் உள்ள முருகப்பெருமான் பக்தர்களுக்கு மேற்கு நோக்கி நின்றவாரு அருள்புரிந்து வருகிறார் ..

இத்திருத்தலத்தின் கும்பாபிஷேகம் 4 கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்று யாகசாலையில் இருந்து புனித கலச நீர் சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தவாறு கோயில் மேல் உள்ள விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது

அரோகரா அரோகரா கோசத்துடன் மஹா கும்பாபிஷேக விழாமிக விமர்சையாக நடைபெற்றது இந் நிகழ்வை முன்னிட்டு முதற்காலயாகசாலை பூஜை மிக விமர்சையாக நடைபெற்றது

இதில் இந்திய பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே .ஆர்.என் ராஜேஷ்குமார், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ .கே.பி.சின்ராஜ் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ .ராமலிங்கம், நாமக்கல் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள், கோவில் விழா குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு கலியுக தெய்வமம் முருகப்பெருமானை வணங்கிச் சென்றனர்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *